’சொடக்கு மேல சொடக்கு போடுது’ நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்..!

கொரோனா வைரஸூக்குப் பிறகு பள்ளி திறந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு ‘சொடக்கு மேல சொடக்குபோடுது’ என்ற பாடலை அடிப்படையாக வைத்து ஆசிரியை ஒருவர் நடனமாடி பாடம் நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 7, 2021, 02:48 PM IST
’சொடக்கு மேல சொடக்கு போடுது’ நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்..!  title=

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகாலம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.  இதனால், வீடுகளிலேயே அடைபட்டிருந்த மாணவர்கள், தமிழ் எழுத்துகளை மறந்து போயிருக்கின்றனர். குறிப்பாக, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப் பட்டாலும், நேரடி வகுப்பில் கல்வி பயலும்போது கிடைக்கும் வலிமையான கற்றல் அனுபவம் இல்லாமல் இருந்தது. ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் இல்லாததால், மாணவர்களின் கற்றல் கவனம் குறைவாகவே இருந்தது.  

ALSO READ | நகராட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்

இதனை போக்கவும், பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களின் விருப்பத்தையும், ஆர்வத்தையும், தூண்டும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பல இடங்களில் கதைகள் கூறி வித்தியாசமான முறையில் மாணவர்களை பள்ளி சூழலுக்கு கொண்டு வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் நடுநிலைப் பள்ளியில் கவிதா என்ற ஆசிரியை பணி புரிந்து வருகிறார். இவர் மாணவர்களுக்கு சினிமா மெட்டுகளில் தமிழ் எழுத்துகளை கூறி, நடனமாடி பாடம் நடத்தி வருகிறார்.

 

குறிப்பாக தற்சமயம் குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அதன் மூலம் தமிழ் எழுத்துக்களை குழந்தைகளுக்கும் புரியும் வகையில் சொல்லிக்கொடுக்கிறார். சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ’சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலுக்கு நடனமாடிக்கொண்டு, தமிழ் எழுத்துகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் பாடம் நடத்தும் அவரின் இந்த வீடியோ, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ALSO READ | Pregnancy Alert: வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்து குழந்தையை இழந்த கர்ப்பிணி

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Telegram Link: https://t.me/ZeeNewsTamil

Trending News