சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் விதமாக கொடநாடு பங்களா அருகே ஜெயலலிதாவின் சிலை அமைக்க நாளை பூமி பூஜை நடக்க உள்ளது.
நீலச்கிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த எஸ்டேட் என்பதனால் ஆண்டிற்கு ஒரு முறையாவது வந்து ஓய்வெடுத்து செல்வார். அவருடன் சசிகலாவும் வந்து சென்ற நிலையில் 2016-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு பின் கோடநாடு வந்த ஜெயலலிதா ஒரு மாதம் தங்கி ஓய்வெடுத்த பின் மே மாதம் மீண்டும் சென்னை திரும்பி சென்றார்.
அதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற இருவரும் வெளியே வந்த நிலையில் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. மேலும் அதிமுக வில் பிளவு ஏற்பட்டது. குறிப்பாக சொத்து குவிப்பு வழக்கிலும் கோடநாடு எஸ்டேட் சேர்க்கப்பட்டு உள்ள நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் என யாரும் கோடநாடு வராமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வந்த சசிகலா பின்னர் மாலை சாலை மார்க்கமாக கோடநாடு எஸ்டேட்டிற்கு மாலை 7 மணி அளவில் வந்துள்ளார். அவருடன் இளவரசி வந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு எஸ்டேட் வந்த அவருக்கு தொழிலாளர்கள் நீண்ட வரிசையாக நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது எம்ஜிஆர் பட பாடல்கள் ஒலிக்கப்பட்டது.
மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!
எஸ்டேட்டில் நுழைந்த அவர் கண்கலங்கிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: ஜெயலலிதா இருக்கும் போது அவருடன் வந்ததாகவும் தற்போது தனியாக வந்துள்ளதாக கண்கலங்கினர். கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களை பார்க்க வந்துள்ளதாகவும் இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்து கூட எதிர்பார்க்கவில்லை என்றார்.
மேலும் கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த ஓம் பகதூர் நீண்ட காலமாகவும் சிறு வயது முதலே எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார் என்றும் இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து நிச்சயமாக தண்டனையை பெற்று தருவார் என நம்புவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் கொடநாடு பங்களவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளதாக கூறிய அவர் விரைவில் அவரது சிலை பூஜை செய்து திறக்கபடும் என்றார்.
அவரிடம் பிளவுபட்ட அதிமுக ஒன்றுபடுவது குறித்து கேட்ட போது: அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும் என்றும் அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் என்றார். சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் விதமாக கோடநாடு பங்களா அருகே ஜெயலலிதாவின் சிலை அமைக்க நாளை பூமி பூஜை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கதாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ