அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் முதல்வராக சசிகலா தேர்வு, ஓபிஎஸ் ராஜினாமா

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். 

Last Updated : Feb 6, 2017, 11:17 AM IST
அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் முதல்வராக சசிகலா தேர்வு, ஓபிஎஸ் ராஜினாமா title=

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். 

தமிழகத்தின் முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதிமுக பொது செயலாளராக வி.கே.சசிகலா பதவி ஏற்றுக்கொண்டார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

அதிமுக அமைச்சர்கள் வி.கே.சசிகலா தான் முதல் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், தமிழகத்தின் புதிய முதல் அமைச்சராக வி.கே.சசிகலா எப்போது அறிவிக்கப்படுவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் எந்த முக்கிய அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஒரு வார கால இடைவெளியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நேற்று மீண்டும் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, இந்த கூட்டத்தில் கண்டிப்பாக வி.கே.சசிகலா முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. 

நேற்று காலை 11 மணி அளவில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் கார்டன் இல்லம் சென்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வரத்தொடங்கினார்கள். 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 133 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டமன்ற அதிமுக கட்சியின் புதிய தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். 

சட்டமன்ற அதிமுக கட்சி தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்ட தகவல், அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வி.கே.சசிகலா காரில் புறப்பட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். வழி நெடுக நின்ற அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

அங்கு நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அனைவரது வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்ட வி.கே.சசிகலா, எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் வார்த்தைகள் பேசினார்.

தமிழக முதலமைச்சராக வேண்டும் என உங்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்கின்றேன். என்றும் மக்களுக்காக உழைப்பேன். 

ஜெயலிதாவின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுவேன். ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைபிடித்து இந்த அரசு செயல்படும். 

கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க முதலில் என்னை முன்மொழிந்தவர் ஓ. பன்னீர்செல்வம். தற்போது நான் முதல்வராக பதவியேற்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ஜெயலலிதாவின் கொள்கையான மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தின் படி இந்த அரசு மக்களுக்காகவே செயல்படும். 

இவ்வாறு பேசினார்.

அதிமுக தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சியின் தலைவராக, கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழகத்தின் புதிய முதல் அமைச்சராக வி.கே.சசிகலா வருகிற 7-ம் அல்லது 9-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அதற்கு முன்னதாக கவர்னரை சந்தித்து சசிகலா சட்டமன்ற அதிமுக கட்சி தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான நகலை கொடுத்து, பதவி ஏற்க அழைக்குமாறு கேட்டுக்கொள்வார். அதன்பிறகு புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்க வருமாறு சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார்.

முதல் அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் வி.கே.சசிகலா, அடுத்த 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக வேண்டும். தற்போதைய நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது.

முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் வி.கே.சசிகலா, தமிழக வரலாற்றில் 13-வது முதல் அமைச்சர், அதிமுக-வின் 5-வது முதல் அமைச்சர், 3-வது பெண் முதல் அமைச்சர் என்ற சிறப்புகளை பெற இருக்கிறார்.

Trending News