சசிகலா தேர்வு: பொய்மையும், கயமையும் வென்றதாக வரலாறு இல்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா 

Last Updated : Feb 6, 2017, 03:01 PM IST
சசிகலா தேர்வு: பொய்மையும், கயமையும் வென்றதாக வரலாறு இல்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன் title=

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா 

ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான தீர்மானத்தை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். 

சசிகலா பேசியதாவது:-

தமிழக முதலமைச்சராக வேண்டும் என உங்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்கின்றேன். என்றும் மக்களுக்காக உழைப்பேன். ஜெயலிதாவின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுவேன். ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைபிடித்து இந்த அரசு செயல்படும். கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க முதலில் என்னை முன்மொழிந்தவர் ஓ. பன்னீர்செல்வம் தான். தற்போது நான் முதல்வராக பதவியேற்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். ஜெயலலிதாவின் கொள்கையான மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தின் படி இந்த அரசு மக்களுக்காகவே செயல்படும் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்- அமைச்சராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு நாள். அவரை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்க கூட்டப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர்களின் முகங்களைக் காணும் பொழுது எவ்வித மகிழ்ச்சியோ, உற்சாகமோ இல்லாமல் ஏதோ தவறு செய்து விட்ட தோற்றத்தைக் காண முடிந்தது. அதிமுக-வின் உண்மையான தொண்டர்களும், தமிழக மக்களும் எக்காலத்திலும் சசிகலாவை முதல்- அமைச்சராக ஏற்க மாட்டார்கள். பொய்மையும், கயமையும் வென்றதாக வரலாறு இல்லை. இடைத்தேர்தலில் அவரை தமிழக மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்பது உறுதி என அவர் கூறினார்.

Trending News