அதிமுக பொது செயலாளராக சின்னம்மா பொறுப்பேறப்பு

அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது மறைவைத் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இடம் காலியாகியுள்ள நிலையில் ஜெயலலிதா வின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகளும் ஒட்டு மொத்தமாக வலியுறுத்தினார்கள். 

Last Updated : Dec 29, 2016, 12:42 PM IST
அதிமுக பொது செயலாளராக சின்னம்மா பொறுப்பேறப்பு title=

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது மறைவைத் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இடம் காலியாகியுள்ள நிலையில் ஜெயலலிதா வின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகளும் ஒட்டு மொத்தமாக வலியுறுத்தினார்கள். 

இன்று அவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் விதி. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அதிமுகவின் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். முதல் அமைச்சர் மற்றும் அதிமுக பொருளாளர் மான ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் உரையாற் றினார்கள். அதன்பிறகு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சசிகலா தலைமையில் பணியாற்ற உறுதியேற்பது என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சின்னம்மா தலைமையில் பணியாற்ற அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்.

 

 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்:-

அதிமுக பொதுச்செயலாளராக கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கினர்.

 

 

Trending News