கடந்த வருடம் நவம்பர் 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை வெளியிட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்றம் இன்று மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற முந்தைய உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன்.
மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.