இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஆர்கேநகர் சட்டசபை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கியது.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பு மனு தாக்கல், 16-ம் தேதி துவங்குகிறது. ஆர்கேநகர் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு அடைந்தது. இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். மனுவை திரும்ப பெற விரும்புவோர் 27-ம் தேதி மாலை 3:00 மணிக்குள் பெற வேண்டும். அன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 12-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஒரு ஓட்டுப்பதிவு மிஷினில், 16 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற முடியும். வேட்பாளர்கள் எண்ணிக்கை, 32 ஆக இருந்தால், இரண்டு ஓட்டுப்பதிவு மிஷின் பயன்படுத்தப்படும்.
வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மிஷின்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். அதிகபட்சம் 4 மிஷின்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். 63 வேட்பாளர்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால், மிஷின்களுக்கு பதில், பழைய முறையான ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட 127 பேர் மனுதாக்கல் செய்துள்ளதால், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். ஜெ., அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகிறார். திமுக சார்பாக மருது கணேஷ் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ப.மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியும் இந்த தொகுதியில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.