திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

 மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், திமுக தலைவரும் முதல்வர் வேட்பாளருமான மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2021, 04:59 PM IST
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னணி.
  • மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
  • பினராஜி விஜயன், மம்தா பானர்ஜிக்கும் ராஜ்நாத் சிங் வாழ்த்து.
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  title=

தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்  சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. முன்னிலை விவரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் வெற்றியாளர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. 

தமிழகத்தில் திமுக வெற்றியை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது. திமுக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களையும் துவக்கி விட்டார்கள். 

இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், திமுக தலைவரும் முதல்வர் வேட்பாளருமான மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து  ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் அவர், "திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கு அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அவர்களது கட்சிகளின் வெற்றிக்காக ராஜ்நாத் சிங் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News