நளினிக்கு 8வது முறையாக பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு 8வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 24, 2022, 08:59 PM IST
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கு
  • நளினிக்கு பரோல் நீட்டிப்பு
  • காட்பாடியில் தங்கியிருக்கிறார்
நளினிக்கு 8வது முறையாக பரோல் நீட்டிப்பு  title=

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். 

இதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உள்ள வீட்டில் தங்கி தனது தாயாரை கவனித்து வருகிறார். தொடர்ந்து ஏழு முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரோல் முடிந்து அவர் நாளை சிறைக்கு திரும்ப வேண்டியிருந்தது.

இந்நிலையில், தனது உடல் நிலையை காரணம் காட்டி அவரது தாயார் பத்மாவதி, நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு 8வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதே வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை அண்மையில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் - உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

மேலும் படிக்க | ’அடக்குமுறையை மீறி வளர்ந்தவன்’ கோவை அரசு விழாவில் முதலமைச்சர் கர்ஜணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News