தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஒருங்கிணைந்த ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை வியாழக்கிழமை (மார்ச் 12) சென்னையில் வைத்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த மார்ச் 5-ஆம் தேதி ரஜினிகாந்த், தனது ஒருங்கிணைந்த ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்ததாகவும், ஒரு பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் ஏமாற்றமடைந்ததாகவும், ஆனால் பிரச்சினையின் விவரங்களை கூட்டத்தின் போது அவர்களிடம் வெளியிட மறுத்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறியதை நினைவு கூரலாம்.
இந்நிலையில் தற்போது உள் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக ரஜினிகாந்த் கூட்டத்தை கூட்டியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சென்னையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை சில மாதங்களில் அறிவிப்பதற்கான முதல் படி என்று ஊகங்கள் பரவி வருகிறது.
முன்னதாக 2018-ஆம் ஆண்டில் தொடங்கி சூப்பர் ஸ்டார் தனது அரசியல் பிரவேசம் குறித்த தகவல்கள் அதிகமாக பரப்பி வரும் நிலையில்., வியாழக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பு ரஜினி மக்கல் மந்த்ரத்தின் மூன்றாவது சந்திப்பாக அமையவிருக்கிறது. கடந்த கூட்டத்தில், 38 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் ரஜினிகாந்துடன் அடுத்த நடவடிக்கை குறித்து விவாதித்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட பின்னர், ரஜினிகாந்த் முக்கிய அரசியல் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருகிறார், அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) உள்ளிட்ட உள்ளூர் மற்றும் தேசிய பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளார்.
இருப்பினும், அவர் எப்போது அரசியலில் நுழைவார் அல்லது எப்போது தனது அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்பது குறித்து ரஜினிகாந்த் எந்தவொரு உறுதியான அறிக்கையும் வெளியிடவில்லை. அவர் தனது அனைத்து ரசிகர் மன்றங்களுடனும் 2018-ஆம் ஆண்டில் ரஜினி மக்கள் மன்றத்தைத் தொடங்கினார் மற்றும் அதற்கு ஒரு நிறுவன வடிவத்தை வழங்க மாவட்ட செயலாளர்களை நியமித்தார். தனது அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான ஊடக செய்திகளை ரஜினிகாந்த் ஏற்கெனவே நிராகரித்தார், அவரது நிறம் பாஜகவின் நிறம் அல்ல என்று வலியுறுத்தியிருந்தார்.
இதனிடைய வரும் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை இந்த ஆண்டுக்குள் தொடங்குவார் என்று வதந்திகள் வெளியாகி வருகின்றன.