சென்னை: சாத்தான்குளத்தில் (Sathankulam) நடந்த இரட்டைக் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். "காரணமானவர்களுக்கு தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும்," என்று ரஜினிகாந்த் (Rajinikanth) தந்து தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "தந்தையும் மகனும் (பி. ஜெயராஜ் மற்றும் ஜே பெனிக்ஸ்) சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை மனிதகுலம் எதிர்த்தது மற்றும் கண்டனம் செய்த பிறகும், சில போலீஸ்காரர்கள் ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் குறித்து நான் அதிர்ச்சியடைகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும், அதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழில் ‘#சத்தியமா_விடவே_கூடாது’ என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்யப்பட்டு உள்ளது.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
இந்த அறிக்கையுடன், ரஜினிகாந்த் (Actor Rajinikanth) புகைப்படமும் இந்த ட்வீட் பகிரப்பட்டு இருந்தது. தற்போது இது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அவரது அறிக்கை சாத்தான்குளம் அத்தியாயத்தின் "வலுவான" அறிக்கைகளில் ஒன்று என்று சிலர் பாராட்டினர்.
பிற செய்தி | கைது செய்.. கைது செய்... சமூக ஊடகங்களில் வலுக்கும் கோரிக்கை #JusticeForJeyarajAndFenix
பிற செய்தி | சாத்தான்குளம் விவகாரம் எதிரொலி!! தூத்துக்குடி எஸ்.பி உட்பட பல அதிகரிக்கள் இடமாற்றம்
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைநீக்கம் செய்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு சட்டத்தின் படி தண்டனை வழங்க வேண்டும், அதேநேரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.