தமிழகத்தில் மழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Last Updated : Oct 10, 2016, 03:22 PM IST
தமிழகத்தில் மழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  title=

சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனக்கூறியுள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், மதுராந்தகம், வேலூரில், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் ஏறக்குறைய 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல செஞ்சியில் 2 செ.மீ., மழையும் மற்றும்  செய்யூரில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News