தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல வீடுகளில் தண்ணீர் புகுத்துள்ளது. தண்ணீரை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை மையம் அதிகாரி கூறியதாவது:-
தமிழக முழுவதும் அடுத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழையும், 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது எனவும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் எனவும் கூறினார். மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினார்.
Current rainfall activity spell expected to continue next 2-3 days in Tamil Nadu: S Balachandran, MeT #TamilNadu pic.twitter.com/94Q5gyByIM
— ANI (@ANI) October 31, 2017
Widespread rainfall expected over coastal region in 24 hrs, fairly widespread rain of moderate intensity over interior region:MeT #TamilNadu pic.twitter.com/WtrbrLUJtt
— ANI (@ANI) October 31, 2017
About 16 places recorded very heavy rainfall and 21 places recorded heavy rainfall: S Balachandran, MeT #TamilNadu pic.twitter.com/IBOffgeBf7
— ANI (@ANI) October 31, 2017