புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் காங்., வேட்பாளர் அறிவிப்பு!!

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி போட்டியிடுவார் என அறிவிப்பு!!

Last Updated : Mar 22, 2019, 09:17 AM IST
புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் காங்., வேட்பாளர் அறிவிப்பு!! title=

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி போட்டியிடுவார் என அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். 

இதில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கும், அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிடுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கபடாமல் இருந்தது.

இந்நிலையில் புதுவை மக்களவைத் தொகுதி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில், சபாநாயகராக இருந்த வைத்திலிங்க, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 

 

Trending News