தூய்மையே இந்தியா சேவை திட்டத்திற்காக புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அவர்கள் தானே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
தூய்மையான இந்தியாவை உருவாக்குவது என்ற நோக்கத்துடன், தூய்மையே சேவை என்ற திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் கடந்த 15-ஆம் நாள் நாடு முழுவதும் தொடங்கிவைத்தார். இதற்காக காணொலிக் காட்சி மூலம் தொழிலதிபர் ரத்தன் டாடா, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின் போது 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போது, தூய்மை இந்தியா திட்டத்தில் தானும் ஒரு பிரஜையாக பங்கெடுத்துக் கொண்டதாக அமிதாப் பச்சன் குறிப்பிட்டிருந்தார். மும்பையில் கடற்கரையை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டு, பல்வேறு துப்புரவுத் திட்டங்களில் தாம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சி அமைச்சர்கள் அனைவரும் துடிப்புடன் தனகளது பகுதியில் தூய்மையான இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
#SwachhataHiSeva HCM @VNarayanasami himself gets down to clean the drainage at Nellithope area, #Puducherry today . pic.twitter.com/714hAUz1se
— CMO Puducherry (@CMPuducherry) October 1, 2018
இந்நிலையில் தற்போது புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அவர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள சாக்கடையில் இறங்கி சாக்கடையினை சுத்தம் செய்துள்ளார். இச்சம்பவதின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.