வேலைவாய்ப்பு உறுதிபடுத்தும் சட்டம் இயற்றப்படுமா? பதிலளிக்காமல் சென்ற பிடிஆர்!

வேலைவாய்ப்பு உறுதிபடுத்தும் சட்டம் இயற்றப்படுமா? என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளிக்காமல் சென்றார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 27, 2022, 05:24 PM IST
  • நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிடிஆர்
  • மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்றார்
  • பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு
வேலைவாய்ப்பு உறுதிபடுத்தும் சட்டம் இயற்றப்படுமா? பதிலளிக்காமல் சென்ற பிடிஆர்! title=

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக அவர்களை சந்தித்து பேசி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம், எல்லீஸ்நகர், திடீர்நகர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பயனளிகளுக்கு முதல்வரின் மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கைக்கால் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, அதிநவீன வாகனம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். 

மேலும் படிக்க | தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

பின்னர், அவர்களிடம் கலந்துரையாடிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பயனாளிகளின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அய்யப்ப சேவா சங்க அன்னதான நிகழ்ச்சியில் நிதியமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென அவர் கலந்து கொள்ளாததால், காத்திருந்த நிர்வாகிகள் அன்னதானத்தை வழங்கினர்.

மேலும், தமிழகத்தில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றார்.

 மேலும் படிக்க | டி ஷர்ட், பேண்ட்டுடன் மனித எலும்புக்கூடு - கூடுவாஞ்சேரியில் அலறிய மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News