மதுரை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்சம்; அதிருப்தியில் பிடிஆர்

மதுரை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உட்சக்கட்டத்தில் இருப்பதால் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 2, 2023, 03:58 PM IST
  • மதுரை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல்
  • பிடிஆர்-ஐ எதிர்க்கும் மாவட்ட செயலாளர் கோ.தளபதி
  • அதிருப்தியில் இருக்கும் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்சம்; அதிருப்தியில் பிடிஆர் title=

தமிழக அமைச்சரவையில் நிதியமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. அவர் வசம் இருந்த ஐடி விங் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. தமிழக அரசில் முக்கிய பொறுப்பை அவர் வகிப்பதால் வேலை பளு காரணமாக பிடிஆர்-க்கு கட்சி பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்ற என்ற தகவல் வெளியானது. இது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும், அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சி பொறுப்பில் அதிமுக்கியத்துவம் கொடுக்காதது தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், மாவட்ட செயலாளராக இருக்கும் கோ.தளபதிக்கும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை.

மேலும் படிக்க | ஈஷா யோகா மையத்தில் இளம் பெண் மரணம்; பிடிஆர் ரியாக்ஷன்

இருவரும் நேருக்குநேர் பார்த்துக் கொள்வதைக் கூட தவிர்த்து வருகின்றனர். அண்மையில் மதுரை மாநகரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் கூட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்ததும், மாவட்ட செயலாளர் தளபதி தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு உடனடியாக கிளம்பினார். இதனால் அதிருப்தியடைந்த பிடிஆர், தன்னுடைய ஆதங்கத்தை விழா மேடையிலேயே வெளிப்படுத்தினார். அந்த விழாவில் பேசும்போது, " கடந்த ஆண்டு எப்படிச் சாதனை படைத்தோமோ, அதேபோல வரும் ஆண்டிலும் நிதித்துறையில் ஒரு முன்னேற்றத்தைக் காண்போம்.

படித்தவர்கள், சிந்தனையுள்ளவர்கள் சரியான இடத்தில் இருந்தால், உரியவர்கள் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் சிறப்பான இடத்தை அடையலாம். என்னோடு பாசத்தோடு, பரஸ்பர உரிமையோடு நெருங்கி பழகுபவர் உதயநிதி. அண்ணன் என்ற முறையில் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ, அந்த வகையில் உதவி செய்வேன்.

உண்மையாக மதத்தைப் பின்பற்றும் எல்லா மதத்தினரோடும் பாசத்தோடும் அன்போடும் இருக்க வேண்டும். மதத்தைப் பின்பற்றுபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும், அடுத்தவரை நேசிக்க வேண்டும். பதவி, பொறுப்பு வரும் போகும். நாளை 10 சீட்டுகள்கூட கிடைக்காத கட்சியாக மாறலாம். ஆனால், மனிதனின் அன்பு, பாசத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உலகில் எனக்கு எத்தனை பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதே பெருமை, என் அடையாளம். அதற்கு மேல் யாராலும் எனக்கு எந்தப் பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது" என பேசினார். அவரின் இந்த கடைசி வரியை உற்றுநோக்கியவர்கள், பிடிஆர் அதிருப்தியில் இருப்பதாலேயே இப்படி பேசியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News