விருதுநகரை வளர்ச்சி மாவட்டமாக மாற்ற திட்டம்!!

விருதுநகர் வளர்ச்சி ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

Last Updated : Jan 31, 2018, 10:04 AM IST
விருதுநகரை வளர்ச்சி மாவட்டமாக மாற்ற திட்டம்!! title=

விருதுநகர்: விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இவ்வளர்சி கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட அமைசர்கள கலந்து கொண்டனர். 

இதில் நாடு முழுவதும் பின்தங்கிய மாவட்டங்களை இனம் கண்டு வளர்ச்சி மாவட்டமாக மாற்றும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள் தேர்வாகியது. அதில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வானது.

ஓரளவு தொழில் ஆதாரங்கள் இருந்தும், சிறப்பான தொழிலாளர்கள் இருந்தும் கால மாறுதலுக்கு ஏற்ப இந்த மாவட்டங்கள் மட்டும் பெரிய வளர்ச்சி பெறாமல் மிகவும் பின் தங்கியிருப்பதாக தெரிவித்தனர். 

இந்த மாவட்டங்களுக்கு தனி கவனம் செலுத்தி பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அனைத்து வசதியுமுள்ள மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி திட்டத்துக்கு பல கூடு ரூபாய் வளர்ச்சி நிதி ஒதிக்கியுள்ளனர் என ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

Trending News