விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், ஆறுமுக வேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிளை சிறையில் இருந்து விசாரணைக்காக ஜான்பாண்டியன் என்ற கைதியை அழைத்துக் கொண்டு துப்பாக்கியுடன் விருதுநகர் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
விருதுநகர் நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விட்டு பின்னர் அருகில் உள்ள டீக்கடையில் இரண்டு காவலர்களும் டீ குடிக்க செல்ல நினைத்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஜான்பாண்டியனின் உறவினர் ஒருவரிடம் இரண்டு காவலர்களும் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடித்துக்கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க | கார் வாங்க சரியான நேரம்: மே மாதத்தில் டாடா கார்களில் அசத்தும் தள்ளுபடிகள்
அவர்கள் கண் அசந்த நேரத்தில் ஜான் பாண்டியனின் உறவினர் ஒருவர் போலீஸ் துப்பாக்கியுடன் தன்னை புகைப்படம் எடுத்துகொண்டார்.
பின்னர் அதனை சமூக வலைதளங்களிலும் அந்த உறவினர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சற்று நேரத்தில் வைரலாகியது. அவரது ஊர் காரர்கள் லைக்குகளை அள்ளி தெளித்துள்ளனர்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் பார்வைக்கும் அந்த புகைப்படம் சிக்கியது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைக்குப்பின், வெளியாட்களிடம் காவலர் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக நடந்து கொண்டதற்காக அன்பரசன், ஆறுமுகம்வேல் காவலர்கள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிவர் சங்கம் திரைபடத்தை போல ஒரே ஒரு போட்டோவை வைத்து சிக்கலை உருவாக்கிய அந்த உறவினர் தற்போது தலைமறைவாக உள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சாலை விபத்தை தடுக்க வரும் புது டெக்னாலஜி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR