பிரதமர்- முதலவர் சந்திப்பு அரசியல் ரீதியானது: மு.க.ஸ்டாலின்

Last Updated : May 25, 2017, 09:47 AM IST
பிரதமர்- முதலவர் சந்திப்பு அரசியல் ரீதியானது: மு.க.ஸ்டாலின் title=

சென்னை பள்ளிகரணையில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்:-

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குளங்கள் தூர்வாரப்படுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். திமுக-விற்கு புகழ் வந்துவிட கூடாது என்ற நோக்கில் சில அரசியல் கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றன.

முதல்வர் பழனிசாமி, பிரதமர் இடையேயான சந்திப்பு அரசியல் ரீதியிலானது தான். அதிமுக-வை இரண்டாக உடைப்பதற்கு மேலும் அதிமுக-வை ஒன்றாக இணைப்பதற்கு கட்டப் பஞ்சாயத்து செய்வது போல் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். 

இவ்வாறு அவர் பேசினார்.

 

Trending News