ஜெயக்குமார் தான் மிகப் பெரிய அமாவாசை: ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பதிலடி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் டிடிவி தினகரனை அமாவாசை என்று விமர்சித்த நிலையில்,  அவருக்கு பதிலடி தரும் விதமாக  ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர்  கிருஷ்ணமூர்த்தி  ஜெயக்குமார் தான் மிகப் பெரிய அமாவாசை என கிண்டலடித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2023, 05:07 PM IST
  • ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் தரப்பு பதிலடி
  • அவர் தான் மிகப்பெரிய அமாவாசை
  • எடப்பாடி பழனிசாமி மீதும் குற்றச்சாட்டு
ஜெயக்குமார் தான் மிகப் பெரிய அமாவாசை: ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பதிலடி title=

ஜெயக்குமாருக்கு பதிலடி 

சென்னை  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த பத்து நாட்களாக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார்  முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை பற்றி தவறாக பேசி வருகின்றனர். அதற்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன். திருச்சி மாநாட்டு அடுத்து சேலத்தில்  மாநாடு நடத்த உள்ளோம். அதில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அவர் கட்சி கட்சியினை ஓபிஎஸ் இடம் ஒப்படைத்து விட்டு சேலத்தில் சென்று விவசாயம் செய்யலாம். 

அமாவாசை யார்?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின் போது  ஓபிஎஸ் டிடிவி தினகரன்  ஆகியோரை அமாவாசை என்று குறிப்பிட்டார். உண்மையில் ஜெயக்குமார் தான் மிகப்பெரிய அமாவாசை. ராயபுரம் தொகுதியில் அவர் இனிமேல் டெபாசிட் கூட வாங்கமாட்டார். வேறு எந்த தொகுதியிலும் நிற்க வாய்ப்பு கிடைக்காது என்பதால், அந்த விரக்தியில் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?

எஸ்பி வேலுமணி காரணம்

உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கு காரணம் எஸ்.பி.வேலுமணி தான். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றிருந்தால்   அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி அடைந்திருக்கும். உள்ளாட்சி அதிகாரிகள் மூலம் எஸ்பி வேலுமணி கல்லா கட்டுவதற்காகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுத்தார். அதிமுகவை ஜாதி கட்சியாக மாற்ற எடப்பாடி முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

எடப்பாடி பழனிசாமிக்கு சவால்

தற்போது நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  ஆறு மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஆண்மகனாக இருந்தால் ஐந்து மாவட்ட செயலாளர்கள் இன்னைக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கட்டும். அப்போது கட்சியில் என்ன நடக்கும் பாரு? என சவால் விடுக்கிறேன். தற்போது அதிமுக பொருளாளர் பதவி வகித்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் தேவையற்றதற்கு கட்சி நிதியை செலவு செய்து கொண்டிருக்கிறார். விரைவில் ஓபிஎஸ் கட்சியை கைப்பற்றும்போது உரிய கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், ஜெயிலுக்கு சென்று கம்பி என்னும் நிலை தான் ஏற்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News