சென்னை காவேரி மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காவேரி மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2018, 03:37 PM IST
சென்னை காவேரி மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு! title=

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காவேரி மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

> கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறித்து நேரலை தகவல்கள்! <

முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார். இந்த சந்திப்பை அடுத்து தலைமை செயலாளரையும் ஸ்டாலின் அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 1200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள்  700 பேரும்  உள்ளனர். சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

Trending News