சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது தவறு: பாமக

 கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலை உயருவது பொதுவானது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் இருந்து எரிவாயு விலை உயர்ந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 17, 2021, 10:19 AM IST
சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது தவறு: பாமக title=

LPG Gas Cylinder Price: கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலை உயருவது பொதுவானது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் இருந்து எரிவாயு விலை உயர்ந்து வருகிறது.

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) சிலிண்டருக்கு 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder Hike) விலையை ரூ .25 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .850.50 இல் இருந்து ரூ .875.50 ஆக அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது தவறு அதனை திரும்பப் பெற வேண்டும் என  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு  ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 
தனது ட்விட்டர் பதிவில், ‘ வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்!’ என பதிவிட்டுள்ளார். 

ALSO READ | LPG Gas Cylinder Price: அதிரடியாக சிலிண்டர் விலை உயர்வு

மேலு, ‘கடந்த 6 மாதங்களில் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து  ரூ.165, அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு உயர்த்துவது நியாயமா? என எண்ணெய் நிறுவனங்கள் சிந்திக்க வேண்டும்! எனவும் அவர் கூறியுள்ளார். 

சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! எனவும் அவர் கூறியுள்ளார். 

ALSO READ | LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News