உங்கள் பிராந்திய மக்களுடன் தொடர்பு கொண்டு உதவுங்கள்: அமைச்சர்களிடம் பிரதமர் மோடி

அமைச்சர்கள் தனது பிராந்திய மக்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு தேவையானதை அறிந்து கொண்டு, உதவ வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2021, 07:15 PM IST
  • இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது.
  • ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உங்கள் பிராந்திய மக்களுடன் தொடர்பு கொண்டு உதவுங்கள்: அமைச்சர்களிடம் பிரதமர் மோடி title=

நாட்டின் இரண்டாவது கொரோனா அலை காரணமாக எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மறு ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் தனது பிராந்திய மக்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு தேவையானதை அறிந்து கொண்டு, உதவ வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். உள்ளூர் மட்டத்தில் உள்ள பிரச்சினைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், மறுஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதனை தெரிவித்தது.

ALSO READ | தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்: ஆம் ஆத்மி MLA கோரிக்கை

 

"மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது மற்றும் வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சகம் மாநிலங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.  23 மாநிலங்களுக்கு 8,593 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. "தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் நுகர்வு தொடர்பாக கண்காணிப்பை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது," என்று  அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ கான்பரென்ஸிங் மூலம் நடைபெற்ற கூட்டத்தில், NITI ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், கோவிட் -19 மேலாண்மை குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார். அவருக்குப் பிறகு, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் மன்சுக் மாண்டவியா ஆகியோர் தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் கிடைப்பது குறித்து விளக்கினர்.

இந்தியாவில் கொரோனா நோய்த் (Corona Virus) தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 3,86,452 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பாடுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ | தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்: ஆம் ஆத்மி MLA கோரிக்கை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News