தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2021, 12:43 PM IST
தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு title=

தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த  பெட்ரோல், டீசல் விலை குறைவூ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.,

தமிழ்நாட்டில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போதுதான் பெட்ரோல் டீசல் விலை குறையும். மத்திய அரசு பல மடங்கு வரியை உயர்த்தியதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதற்கு காரணம். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ALSO READ | Petrol and Diesel: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வாய்ப்பேயில்லை: தமிழக நிதி அமைச்சர்

கச்சா எண்ணெய் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. எனவே நிதிநிலைமை சீரான பின்னரே பெட்ரோல் விலை  குறைக்கப்படும்.  2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த போதும், தமிழகத்தில் மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை கலைஞர் குறைத்தார்.

மத்திய அரசு பல மடங்கு வரை உயர்த்தியதால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 75 டாலரைத் தாண்டியுள்ளது. அரசின் நிதிநிலைமை சரியான பிறகுதான் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடியும் என சொல்லவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் என தெரிவித்துள்ளார்.

ALSO READ | MK Stalin உறுதி அளித்தது போல் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News