இரண்டு மாத பரோல் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் சிறைக்கு திரும்பினார் பேரறிவாளன்!
கடந்த 26 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டு, ஜோலார்ப்பேட்டையில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவர் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் கழித்து பரோல் கிடைத்துள்ளது.
பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு அளிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது.
ஒருமாத காலம் பரோல் முடிவடைந்த நிலையில் மீண்டும் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் வேண்டுகோள் விடுக்க அவருக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது இரண்டு மாத கால பரோல் இன்றோடு முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.