அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் திருக்கார்திகைக்கு மாதம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு நடத்துகின்றனர். மாதம் தவறாமல் செல்லும் பக்தர்களும் உண்டு. இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையையொட்டி பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பல ஊர்களிலும் இருந்து பழனி முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் சென்றுள்ளனர். இதனால் எதிர்பார்க்காத கூட்டம் அங்கு அலைமோதுகிறது.
மேலும் படிக்க | தூத்துக்குடி வரும் நிர்மலா சீதாராமன்..! பின்னணி இதுதான்..!
மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் இரண்டும் மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய மூன்று மணிநேரம் காத்திருக்கின்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வர கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருத்திகை தினம் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்திட ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் கட்டுப்பாடுகள்
பழனி முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதவிநாயகர் கோவில், மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய மூன்று இடங்களில் பக்தர்கள் தங்களது செல்போனை 5 ருபாய் கட்டணம் செலுத்தி வைத்துக்கொள்ளலாம். தரிசனம் முடிந்த பிறகு அதனை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். பக்தர்களுக்கு செல்போன் வைக்கும் இடம் குறித்த தகவல்கள் தெரிவிக்கும் விதமாக பேருந்து நிலையம் முதல் பழனி கோவில் மலையடிவாரம் வரை ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்-வைகோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ