கொரோனாவின் தாக்கத்தால், நாட்டில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, ஆக்சிஜன் தேவைக்காக அவர் நெதர்லாந்து நாட்டை அணுகினார்.
கோரிக்கையை ஏற்ற நெதர்லாந்து அரசு, தமிழகத்தில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக ஆக்ஸிஜனை அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிக்கு நல்லப் பலன் கிடைத்துள்ளது.
Also Read | Cyclone Tauktae கரையைக் கடக்கத் தொடங்கியது; எச்சரிக்கையில் குஜராத் 14 பேர் பலி
COVID-19 நோயின் திடீர் அதிகரிப்பு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையை அதிகரித்துள்ளதால், நிலைமையை சீர் செய்வதற்கான வழிமுறைகளை மாநில அரசு ஆராய்ந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கான பலன்களும் தெரியத் தொடங்கிவிட்டன. கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும் ஓரளவு குறையத் தொடங்கிவிட்டது.
எனவே, தமிழகத்தில் கொரோனாவை நாம் வீரியத்துடன் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்ட்டோம். மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் அதனை பூர்த்தி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு, தமிழகத்திற்கான திரவ ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் நாளொன்றுக்கு தமிழகத்திற்கான ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்து 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தினார்.
Also Read | Adi Shankaracharya Jayanti : இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி
அதேபோல் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி என்ற சாதுரியமான முடிவும் எடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது நாளொன்றுக்கு 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கலாம். அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சிக்கல்கள் களையப்பட்டு விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013 முதல் மூடப்பட்டிருக்கும் திருநெல்வேலி சிப்காட் தொழில்துறை வளாகத்தில் உள்ள உற்பத்திப் பிரிவும் இன்னும் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read | ரயில் மூலம் தமிழகத்துக்கு 151 டன் ஆக்சிஜன் விநியோகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR