நாளை(டிசம்பர் 3) உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
"சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்” ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை நினைவு கூறுவதும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம், 2016-ஆனது மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய சகாப்தம் ஆகும். மாற்றுத்திறனாளிகள் மாண்புடன் கூடிய நிறைவான வாழ்க்கை வாழ வழி வகை செய்வது நம் அனைவரது கடமையாகும்.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்கனவே உள்ள அணுக இயலும் தன்மை எளிதாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வாய்ப்புகள் எங்கும் உருவாகி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்."
என குறிப்பிட்டுள்ளார்!
Hon'ble CM message - World differently abled persons. pic.twitter.com/tP1FFU5uRs
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 2, 2017