அமமுக அமைப்புச் செயலாளரும், வேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான ஞானசேகரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவின் பின்னர் டிடிவி. தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார். அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தற்போது அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.