75th Independence Day: தேசியக் கொடியை ஏந்தி அண்ணாமலை சைக்கிள் பேரணி

தமிழக பாஜக நடத்திய சைக்கிள் பேரணியில்,  கே.டி, ராகவன், வினோஜ் கே,செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2021, 01:45 PM IST
75th Independence Day: தேசியக் கொடியை ஏந்தி அண்ணாமலை சைக்கிள் பேரணி title=

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில், தமிழக பாஜக தலைவர்கள், தமிழகம் முழுவதும் 75 இடங்களில், தேசியக்கொடியை பாஜக ஏற்றிவைத்து, ஒவ்வோரிடத்திலும், ஆன்றோர் ஒருவர் குறித்து போற்றி, சுதந்திர தின உரை நிகழ்த்தப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பாஜக சார்பில் 75 பேருடன் சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.

பாஜக தலைவர் அண்ணாமலை சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியில், கே.டி, ராகவன், வினோஜ் கே,செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், சுதந்திர தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. வேலூரில் 75 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மாநில தலைவர் கே.அண்ணாமலை.

“நாங்கள் அரசியலை தூய்மைப்படுத்த வந்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் நாள் வரும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது உரையில் தெரிவித்தார்.

ALSO READ: நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்- பிரதமர் மோடி

முன்னதாக இன்று காலை, சென்னை கோட்டையில் உள்ள கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) கொடியேற்றி சுதந்திர தின விழாவை துவக்கி வைத்தார். 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் நேப்பியர் பாலம் அருகே 59 அடி உயரத்தில் கட்டப்பட்ட நினைவுத் தூண் இன்று திறக்கப்பட்டது.

ALSO READ | 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News