ஓகி புயல்: மீனவர்களை எச்சரித்த வானிலை மையம் - வீடியோ

கடலோர மாவட்டங்களில் ஓகி புயல் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்தில் வீசுவதால், கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Last Updated : Nov 30, 2017, 01:32 PM IST
ஓகி புயல்: மீனவர்களை எச்சரித்த வானிலை மையம் - வீடியோ title=

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

ஓகி புயல் குறித்து சென்னை வானிலை மையம் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியது,

ஓகி புயல் வடமேற்கு திசை நோக்கி லட்சத்தீவு கடந்து செல்லும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மாவட்டங்களில் மிக மிக கன மழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு. மீனவர்களுக்கான எச்சரிக்கை  பொருத்த வரை கன்னியாக்குமரி, தூத்துக்குடி, நெல்லை, இராமனாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசும். கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிறுத்தினார்.

 

 

மேலும் அடுத்த 3 நாட்களுக்குள் அதிதீவிர புயலாகி மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

Trending News