தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்: ஓ.பி.எஸ்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வறட்சியால் பயிர்கள் கருகியதைப் பார்த்து மனவேதனை அடைந்த பல விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர். 

Last Updated : Jan 10, 2017, 03:59 PM IST
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்: ஓ.பி.எஸ். title=

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வறட்சியால் பயிர்கள் கருகியதைப் பார்த்து மனவேதனை அடைந்த பல விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர். 

இந்நிலையில் முதலமைச்சர் நியமித்த குழுக்கள், தமிழகம் முழுவதும் உள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

இதையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

மிழம் வறட்சி  மாநிலமாக  அறிவிக்கப்படும். அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படும். அதற்கான அன்னவாரி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

வறட்சியில் இருந்து வன உயிரினங்களை  பாதுகாக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பபடும். குடிநீர் பற்றாக்குறையை போக்க ரு.160 கோடியில் புதிய திட்டம் தொடங்கப்படும்.தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும். கிராமப்புற வேலை உறுதி நாள் திட்டம் 150 ஆக உயர்த்தப்படும். நெல் பயிர் ஏக்கருக்கு ரூ. 5465-ம் மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். 

கால்நடை தீவின தட்டுப்பாட்டை போக்க ரூ. 78 கோடியில் புதிய திட்ட்டம் ஏற்படுத்தப்படும். பயிர்க்கடனை மத்திய கால கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும் வறட்சி நிவாரண கோரிக்கை மனு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்படும்

33 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும். ஆட்சியர்களின் அறிக்கை கிடைத்த பின் உரிய நிவாரண உதவி வழங்கப்படும். 

டெல்டாவில் 100 சதவீதம் பயிர் இழப்பு ஏற்பட்டு இருந்தால் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.  60 சதவீத பயிர் இழப்பு ஏற்பட்டு இருந்தால் ஏக்கருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

Trending News