பொங்கல் பரிசு... ரூ.3000 வழங்குக - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 15, 2022, 12:07 PM IST
  • பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்க வேண்டும்
  • பல ஆண்டுகள் வழக்கத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்
  • ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை
 பொங்கல் பரிசு... ரூ.3000 வழங்குக - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி - சேலை வழங்குவது பொங்கல் தொகுப்பு வழங்குவது ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற நடைமுறையாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் என ஆணையிட்டது. ஆனால், 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

மேலும், கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தால் மக்கள் எந்த பயனும் அடையவில்லை என்றும், அரசாங்க பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

இதனால் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து அட்டைதார்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு வருமா? அமைச்சர் சேகர்பாபு பதில்

மேலும் படிக்க | மீண்டும் வருமா புயல்?... இன்று வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்

மேலும் படிக்க | ஒரே வீட்டிலிருந்து இரண்டு முதலமைச்சர்கள் வரலாம் - விமர்சிக்கும் டிடிவி தினகரன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News