பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்விதுறை அமைச்சர்

தமிழகத்தில், நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2021, 01:42 PM IST
  • நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
  • நவம்பர் 1-ஆம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதால், கொரோனா தடுப்பு மட்டுமின்றி, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் அரசு கவனத்துடன் உள்ளது.
பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்விதுறை அமைச்சர்  title=

நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிந்திருந்தார். ஆனால் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.  ஆனால்  நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையம் முன் உள்ள காதிகிராஃப்ட் விற்பனை மையத்தில், காந்தியடிகளின் படத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது அவர் கூறுகையில்,  தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே சுழற்சி முறை வகுப்புகள் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும். பள்ளிக்கூடத்துக்கு வரும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நடைமுறைகள் கூடுதல் கவனத்துடன் கண்காணித்து கட்டுப்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் மேம்படுத்தப்படும்.

school

மேலும் நவம்பர் 1-ஆம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதால், கொரோனா தடுப்பு மட்டுமின்றி, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் அரசு கவனத்துடன் உள்ளது.  நவம்பர் 1-ஆம் தேதி 1 வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'' என்று அவர் தெரிவித்தார்.  இதனிடையே தமிழகத்தில் , கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திங்கள் முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News