நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் பேசும்போது, இ-பாஸ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். ஆனால் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் போது வாகனத்தில் பயணிப்பவர்களின் விபரத்தையும், தங்கும் நாட்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மே 7-ந்தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதனை அடுத்து இ-பாஸ் முறையை அமல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் தற்போது இ-பாஸ் பெறுவதற்கான தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு தொடரும் சிக்கல்... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள் - புதிய வழக்கு!
அந்த இணையதளம் நாளை மாலை செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா உதகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி மே ஏழாம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வர இபாஸ் முறை அமல்படுத்தப்படும் என்றும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா கூறினார்.
அனைவரும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் வகையில் மிகவும் எளிமையான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும் ஆனால் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் போது வாகனத்தில் பயணிப்பவர்களின் விபரத்தையும், தங்கும் நாட்கள் மற்றும் இடங்களின் விபரத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இ பாஸ் வழங்குவதில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்ற அவர் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் போதும் என்றும் இந்த இ-பாஸ் நடைமுறை மே 7-ந் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சோதனை முறையில் அமல்படுத்தபடுவதாக கூறினார். மேலும் அரசு பேருந்தில் வருபவர்கள் இ பாஸ் பெற தேவையில்லை என்றும் அரசு பேருந்துகளில் வருபவர்களின் எண்ணிக்கையை போக்குவரத்து கழக அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்றார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களது இமெயில் முகவரியை பதிவு செய்தும் உள்நாட்டு மக்கள் தங்களது செல்போன் நம்பரை பதிவு செய்து இபாசை பெற்றுக் கொள்ளலாம் என்றார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வணிகரீதியாக வருபவர்களும், தொழில் சம்பந்தமாகவும் வருபவர்களும் இணையதளத்தில் சென்று பதிவு செய்தாலே தானாக இ-பாஸ் உருவாகும் என்றும் அந்த இ-பாஸில் ஒரு QR code உருவாகும் அதனை வைத்துக்கொண்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும்போது மாவட்ட எல்லையில் உள்ள அதிகாரிகள் சோதனை செய்த பின் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
மேலும் இ-பாஸ் உடன் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை நபர்களும் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அவர் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்... செருப்புடன் பெண்கள் போராட்டம் - கோவையில் பரபர!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ