மதுரையில் என்.ஐ.ஏ திடீர் சோதனை! அதுவும் இவரது வீட்டில்!

போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் முகமது தாஜூதீன் வீட்டில் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Oct 11, 2023, 09:07 AM IST
  • மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.
  • போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வாங்க முயற்சி.
  • முகமது தாஜூதீன் என்பவரது வீட்டில் சோதனை.
மதுரையில் என்.ஐ.ஏ திடீர் சோதனை! அதுவும் இவரது வீட்டில்!  title=

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள காஜிமார் தெருவில் முகமது தாஜூதீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.  போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் இவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது தாஜுதீன் தற்போது ஊரில் இல்லை என்பதால் அவரது சகோதரர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.  ஏற்கனவே செப்.25 அன்று இவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி! மருத்துவமனையில் அனுமதி!

ஹைதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கு மற்றும் போலி பாஸ்போர்ட் குறித்தும் NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாவோயிஸ்ட் செயல்பாடுகள் குறித்து ஜார்க்கேண்டில் பதிவான வழக்கு தொடர்பாகவும் சோதனை என தகவல் வெளியாகி உள்ளது.  முகமது தாஜுதீன் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் வீட்டில் NIA அதிகாரிகள்சோதனை நடத்தி வருகின்றனர்.  முகமது தாஜுதீன் ஒரு இஸ்லாமிய அமைப்பில் செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காஜிமார் தெரு பகுதியில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரேல் போர் குறித்தும் ஆதரவாக பேசியது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரி நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்த சோதனையில் 2 மணி்நேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக இது போன்ற NIA அதிகாரிகள் சோதனை நடத்தப்படுவதாக தாஜூதீன் பேட்டி அளித்துள்ளார்.  தனக்கும் பீகாருக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் பீகார் சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போனை பறிமுதல் செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.  மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜுதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை அழைத்துசென்று விசாரணை நடத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சென்ற பொழுது பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக தாஜுதீனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | 50 வயது ராஜமெளலிக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா.. தலையே சுத்துதே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News