மேலடுக்கு சுழற்சி!! அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுசேரியின் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் என்ன கூறியுள்ளது என்பதை பார்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 20, 2019, 08:42 PM IST
மேலடுக்கு சுழற்சி!! அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் title=

சென்னை: தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கடலோரமாக இருக்கும் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதேபோல உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டு உள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுசேரியின் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுகோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த மாதம் (செப்டம்பர்) 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் தான் அதிகமான மழை பதிவாகி உள்ளது. இயல்பை விட 37 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.

சென்னை பொறுத்த வரை வானத்தின் நிலைமை பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை இருக்கும்.

Trending News