சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் ஆணையாம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து, மாற்றுத்திறன் வாக்காளர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளனர்.
மாவட்ட தேர்தல் ஆணையாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள எண்.11, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல்-2017யை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமையதுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கடந்த 21.11.2017 முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்பொழுது மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தேர்தல் தொடர்பான தகவல்கள்மற்றும் புகார்களை பெறுவதற்கு சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எவரேனும் தேர்தல் தொடர்பான சேவைகள் மற்றும் புகார்களை சைகை மொழியில் தெரிவிக்கலாம். தேர்தல் குறித்த சேவைகள் மற்றும் புகார்களை சைகை மொழியில் 7550225820 மற்றும் 7550225821 என்ற வாட்ச்ஆப் எண்களில் காணொலிமுறையில் (Video Call) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அழைத்து தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் ஆணையாளர் முனைவர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.