காந்தி இல்லை.. நேதாஜியே சுதந்திரத்திற்கு காரணம்.. ஆளுநர் ரவி சர்ச்சை

Governor RN Ravi On Netaji: 1942ஆம் ஆண்டுக்கு பின்னர் காந்தியின், சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. என கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2024, 01:37 PM IST
  • நேதாஜி இல்லையென்றால் 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது - ஆளுநர்
  • நேதாஜி, INA குறித்து ஆராய்ச்சியில் அதிகளவில் ஈடுபட வேண்டும் - ஆளுநர்
  • நேதாஜி ராணுவத்தில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி உள்ளனர் - ஆளுநர்
காந்தி இல்லை.. நேதாஜியே சுதந்திரத்திற்கு காரணம்.. ஆளுநர் ரவி சர்ச்சை title=

Governor RN Ravi On Netaji: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் இன்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 127வது  பிறந்த தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி மற்றும் இரத்த தான முகாமினை  தமிழக ஆளுநர் துவக்கி வைத்தார்.

நேதாஜி குறித்து ஆளுநர்

இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இந்திய  தேசிய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆங்கிலேயர் சென்ற பின்னர் நீண்ட காலம் நம் பாரம்பரியத்தை பண்பாட்டை ஆன்மீக சிறப்பை மறந்தோம். சுதந்திர போராட்ட வீரர்களை நாம் மறந்தோம். குழப்பத்திற்கு ஆளானோம். 

நேதாஜி ராணுவத்தில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி உள்ளனர். தமிழகத்தில் இருந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் உரிய அங்கீகாரத்தை பெறவில்லை. நேதாஜி பெண்கள் படையை கட்டமைத்த பின்னர் 7 தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் பொறுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர்.]

மேலும் படிக்க | ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

காந்தியின் போராட்டம் பலனிக்கவில்லை

நேதாஜி இல்லையென்றால் 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. 1942ஆம் ஆண்டுக்கு பின்னர் காந்தியின், சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. இந்தியாவிற்குள்ளே மக்கள் தங்களுக்குள் மோதிகொண்டிருந்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் பிரிடிஷார் இந்தியாவில் இருந்து வெளியேற காரணமில்லை என அப்போதைய இங்கிலாந்து பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார். கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே காரணம் என்று சுட்டிகாட்டியுள்ளார். நம் பல்கலைக்கழகங்கள் நேதாஜி, இந்திய தேசிய ராணுவம் (INA) குறித்து ஆராய்ச்சியில் அதிகளவில் ஈடுபட வேண்டும்" என்றார். 

மாணவர்கள் வருகை கட்டாயம்

ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள ECE,CSE,IT ஆகிய துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் எனவும்  முதல்வர் (CECG) துறை தலைவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியிருந்தார்.

மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வருகை பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக வந்திருந்த மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு மணிநேர ஆய்வக பயிற்சி இருந்தது எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News