தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து- 4 வாரத்திற்கு நீடிப்பு!!

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும், திமுகவும் பதிலளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Oct 18, 2016, 12:21 PM IST
தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து- 4 வாரத்திற்கு நீடிப்பு!! title=

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும், திமுகவும் பதிலளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி, ஜி. ரமேஷ், வீ. பார்த்தீபன் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் ரத்து மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending News