MR Vijayabaskar Brother Arrested: கரூரில் வாங்கல் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை இன்று கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஜூலை 19ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்தார். அதன்பின், தற்போது நிபந்தனை ஜாமின் பெற்று வெளிவந்துள்ளார்.
மேலும் படிக்க | விஜய்யின் மாநாடு நடைபெறுமா? புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!
முன் ஜாமின் மனு தள்ளுபடி
இதற்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
வழக்கு தொடர்பாக முகாந்திரம் இருப்பின் இவர்களை கைது செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்தது. இந்த நிலையில் இன்று கரூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிஐ தீவிர விசாரணை
தொடர்ந்து, கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்பதால் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | நில மோசடி வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர்! விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ