விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்த்தவர் கொத்தாளமுத்து (27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி (27) என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்து கொத்தளமுத்து, காயத்ரி இருவரும் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் உள்ள பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை தனது மருமகள் காலை முதல் அவரது அறையை விட்டு வெளியே வாரவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மருமகள் காயத்ரி மற்றும் 4 மாத குழந்தையும் உயிரிந்த நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். மேலும் அவர்களை இந்த நிலையில் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் படிக்க | கேரளாவை உலுக்கிய விஸ்மயா கொலை வழக்கு - கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு
இதனை அடுத்து இது குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர், மேலும் தாய் மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆண நிலையில் தனது 4 மாத குழந்தையுடன் காயத்ரி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயத்ரி கணவர் கெத்தாளமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | மீண்டும் ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்த வரதட்சணை கொடுமை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR