சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் மத்திய இணை அமைச்சர் ஆய்வு!!

Last Updated : Oct 15, 2017, 02:05 PM IST
சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் மத்திய இணை அமைச்சர் ஆய்வு!! title=

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை பல பேர் பலியாகி உள்ளனர். அனைத்து கட்சியினரும் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுகளும் செய்து வருகின்றனர்.

இதுவரை டெங்கு பாதித்த 12,000 பேருக்கு அரசு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய மத்திய குழு வந்துள்ளது. 

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் இன்று ஆய்வு நடத்தினார். 

 

 

Trending News