ஒகி புயல் கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் குறிப்பாக மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் ஏராளமனவோர் மீனவர்கள் உயிரிழந்தனர்.
தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் பலர் இப்புயலால் மாயமாகினர். ஓகி புயலின் கோரத் தாண்டவத்தில் கேரளாவைச் சேர்ந்த 186 மீனவர்களும், தமிழகத்தை சேர்ந்த 433 மீனவர்களும் காணவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு மற்றும் கேரளா அரசு நிவாரணம் நிதி அறிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீரமைப்பு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
Leaving for Mangaluru, Karnataka. Tomorrow, I will visit Lakshadweep, Tamil Nadu, and Kerala and extensively review the situation that has arisen due to #CycloneOckhi. I will meet cyclone victims, fishermen, farmers, officials and public representatives. https://t.co/XaANfnWrr4
— Narendra Modi (@narendramodi) December 18, 2017
இந்நிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்) தென் இந்திய கடலோர பகுதிகளை பார்வையிட வருகிறார். பிரதமர் வரவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.