வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும் சந்திக்கும் பகுதியானது தமிழக பகுதிகளில் நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில்..!
வரும் 24 மணி நேரத்தை பொருத்த வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானாது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.