தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது எம்எல்ஏ செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
கரூரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க, போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக, செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கரூர் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கூறியதாவது,
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மேலும், 229.46 கோடி ரூபாய் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டது.
ஆனால், மருத்துவமனைக் கட்டடப் பணிகளைத் தொடங்கவிடாமல் தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தடைசெய்து வருகின்றனர் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இருவரையும் கண்டித்து, வரும் 24-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி, கரூர் காவல் ஆய்வாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.