கறியை கவ்விக்கொண்டு சென்ற நாய், துரத்திச்சென்ற கடை ஓனர்: பீதியை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்

கறிக்கடையில் வெட்டிய ஆட்டுக்கறியை நாய் கவ்விக்கொண்டு சென்றதையடுத்து, நாயிடம் இருந்து அதை பறித்து மீண்டும் கடைக்கு கொண்டுவந்த உரிமையாளரின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 17, 2024, 04:46 PM IST
  • மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவில் அருகே கறிக்கடை.
  • கோவில் முன்பு தள்ளுவண்டியில் ஆட்டு கறிக்கடை அமைக்கப்பட்டு கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
  • இங்கு எலும்பு கறியாக 500 ரூபாய்க்கும் தனிக்கறியாக 600 ரூபாய்க்கு கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கறியை கவ்விக்கொண்டு சென்ற நாய், துரத்திச்சென்ற கடை ஓனர்: பீதியை கிளப்பும் சிசிடிவி காட்சிகள் title=

மதுரை பழங்காநத்தம் பகுதியில் கோவில் அருகே கறிக்கடை இயங்கி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கறிகடையில் வெட்டிய ஆட்டுக்கறியை நாய் கவ்விக்கொண்டு சென்றதையடுத்து, நாயிடம் இருந்து அதை பறித்து மீண்டும் கடைக்கு கொண்டுவந்த உரிமையாளரின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகர் பழங்காநத்தம் பகுதியில் மாயன் கறிக்கடை இயங்கி வருகிறது. பழங்காநத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோவில் முன்பு தள்ளுவண்டியில் ஆட்டு கறிக்கடை அமைக்கப்பட்டு கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு எலும்பு கறியாக 500 ரூபாய்க்கும் தனிக்கறியாக 600 ரூபாய்க்கு கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆட்டுக்கறி கடை இயங்கியது. அப்போது மதியம் ஒரு மணி அளவில் கறிக்கடையில் ஆடுகள் கறிக்கு வெட்டப்பட்டு தள்ளுவண்டிக்கு கீழே கறி கழுவுவதற்காக வைக்கப்பட்ட தண்ணீரில் ஆட்டின் குடல் போட்டு வைத்திருந்தனர்.

மேலும் படிக்க | பக்ரீத் பண்டிகை: கொடிக்கால்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் கறிக்கடையை சுற்றி வலம் வந்த நிலையில் அதை விரட்டாமல் கண்டு கொள்ளாமல் உரிமையாளர் கறி வெட்டிக் கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக அங்கிருந்த நாய் ஒன்று ஆட்டின் குடலை கவ்வி கொண்டு சென்றது. நாய் கொண்டு சென்றதைப் பார்த்த உரிமையாளர் நாயை விரட்டி நாயிடமிருந்து கறியை பறித்து வந்து மீண்டும் கறிக்கடையில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

சம்பவத்தினுடைய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளஅ. மேலும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற சுகாதாரமற்ற முறையில் இயங்கக்கூடிய கடைகள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும் தற்போது கேள்வி எழுந்துள்ளது. நாய் கவ்விக் கொண்டு சென்ற கறியை மீண்டும் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக கறிக்கடைக்கு கொண்டு வந்த உரிமையாளர் மீது நடவடிக்கை பாயுமா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் படிக்க | நில மோசடி வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர்! விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News