கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில். இந்த கோயில் 13 ஆண்டுகளுக்கு பிறகு புணரமைக்கப்பட்டு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் மற்றும் சப்த கன்னியர் சுவாமிகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே 11_ஆம் தேதி) சனிக்கிழமை மாலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிர்ஷங்கிரஷனம், ரக்க்ஷபந்தனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால பூஜை நடைபெற்று திரவியாஹீதி, மகா பூர்ணாஹீதியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் படிக்க | விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன்... 'ஒத்துழைக்காத காவல்துறை' - பொங்கிய பிரேமலதா!
அதனைத்தொடர்ந்து இரண்டாம் கால பூஜை ஆரம்பமாகி கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்ப்பட்டபிறகு கடம் புறப்படப்பட்டது. பின்னர் பூர்வாங்க பூஜைகள் சுந்தரமுருகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் விநாயகர், சப்த கன்னிமார்களுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத்தொடந்து மாரியம்மன், காளியம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று இரவு வான வேடிக்கைகள், மேளதாளங்களுடன் அம்மன் சுவாமிகள் வீதி. உலா நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் குருவன்குப்பம் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ