திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு அதிரவைக்கும் திருப்பங்கள்...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன.  

Last Updated : Oct 4, 2019, 07:19 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு அதிரவைக்கும் திருப்பங்கள்... title=

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன.  

அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகிகப்பட்ட நிலையில், புதுக்கோட்டை விடுதி ஒன்றில் தங்கியிருந்த வடமாநிலத்தவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

தீவிர விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், திருவாருரில் வாகன தணிக்கையின் போது,  நகைக்கடை கொள்ளை வழக்கில்  தொடர்புடைய மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

அவரிடம் இருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. நகைகளில் இருந்த பார்கோடுகள் மூலம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகள் தான் அவை என்பது தெரியவந்தது.  தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தப்பியோடிய சுரேஷின் உறவினர் முருகன், பிரபல கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்ட தேடப்படும் குற்றவாலி என கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து திருவாரூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கொள்ளையடித்ததில் தன்னுடைய பங்கினை மட்டும் பெற்றொக்கண்டு வந்ததாகவும் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Trending News